மத்திய மாநில அரசுகளின் சிறப்பான ஆட்சியினால் நாட்டில் விலைவாசி உயராமல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது விலைவாசி உயர்ந்ததால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு அறிவித்த சிறுகுறு விவசாயிகளுக்கான உதவி தொகையின் முதல் தவணை தமிழகத்தில் உள்ள 14 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவுவது தவறா என்று திமுகவுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,13 ஆண்டுகளாக மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம்வகித்த திமுக, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.
Discussion about this post