அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள தேர்தலில், வெற்றி குறித்து செல்போன் மூலமாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், டிரம்பிற்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு, அவர் கொண்டுவந்த நடைமுறைகளும், வெளிநாட்டுடனான ஒப்பந்தங்களுக்கும், எதிர்மறையான விமர்சனங்கள் எழத் தொடங்கின. இந்த நிலையில், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு, செல்போன் மூலம் எடுக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக, சுமார் 52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, அடுத்த ஆண்டு டிரம்ப் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Discussion about this post