இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சிறிசேன போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அதிபர் சிறிசேனவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதால், அங்கு அடுத்த மாதம் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதில் தற்போதைய அதிபர் சிறிசேன வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால் அவர், தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேப்போல் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்ச ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை. 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில், அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மூவரும் களத்தில் இல்லாமல் நடக்கும் இரண்டாவது அதிபர் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post