குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், குடியரசுத் தலைவருக்கு தனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். கொள்கைகளைப் பற்றிய அவரது நுண்ணறிவு மற்றும் புரிதலில் இருந்து இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது என்றும், ஏழைகளையும் நலிவுற்றோரையும் மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும் எனவும் மோடி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் குடியரசு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Discussion about this post