அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்கா விதித்த தடையை மீறி சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாய், ஈரானுடன் தடைகளை மீறி வர்த்தகம் வைத்துள்ளடன், மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.
எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றபோதும், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அவர் பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. நெருக்கடி நிலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் ஹூவாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய 70 நிறுவனங்களை தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்தது.
Discussion about this post