வரும் 24 ஆம் தேதி இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியா டிரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24 ஆம் தேதி முதல் முறையாக இந்தியா வருகிறார். அப்போது குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பின்னர் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சர்தார் வல்லபார் பட்டேல் மைதானத்தை மோடியும் டிரம்பும் இணைந்து திறந்து வைக்கின்றனர். காந்தி நினைவிடம் முதல் அகமதாபாத் வரையிலான 22 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக சென்று மைத்தானத்தில் ஒரு லட்சம் மக்கள் முன்பு உரையாற்ற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், டிரம்ப், மோடி ஊர்வலம் செல்லும் வழிகளில் அவர்களை வரவேற்பதற்கான ஓவியங்கள், பேனர்கள், என வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Discussion about this post