தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அய்யம்பட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 400 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளைச் செய்து மாவட்ட
நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Discussion about this post