தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற கீழ்த்தரமான தந்திரங்களை பின்பற்றுவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட பிரசாரத்தை துவங்குகினார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செல்லும் பகுதிகள் அனைத்திலும் மக்கள் ஆதரவு நன்றாக உள்ளதாகவும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.
வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குறிப்பிட்ட துரைமுருகன் வீட்டில், எவ்வாறு 9 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகள் தான் தனக்கு நினைவுக்கு வருவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.