அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் நந்தன்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், நந்தன்கால்வாய் திட்டத்தை இதுவரை நிறைவேற்றாமல் இருக்கும் திமுக, திட்டத்தை நிறைவேற்றுவோம் எனத் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.
Discussion about this post