தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதையடுத்து, கேரளாவில் திரிசூர் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் நவம்பர் வரையிலான 6 மாதங்களில் கேரளா மாநிலத்திற்கு தேவையான 90 சதவீத மழை பொழியும். இதனால் தென் மேற்கு பருவமழை அம்மாநிலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே நடப்பு ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திரிசூர் மாவட்டத்திற்கு வரும் 10ஆம் தேதி ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், மாலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ் அலார்ட் விடுக்கப்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது.
Discussion about this post