குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகிவிட்டதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கான நிதி திரட்டும் மாரத்தான் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த், டிரையத்லான் வீராங்கனை வினோலி ராமலிங்கம் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், அரிஸ்டோகிராஃப் பவுண்டேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது என்றார்.
இந்த போட்டியில், அனைவரும் பங்கேற்று எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது என்றும், தற்போது மக்களிடம் அதற்கான விழிப்புணர்வு அதிகமாகி விட்டதாகவும் நடிகர் பிரசாந்த் கூறினார்.
Discussion about this post