ஒரே நாளில் இரு இடங்களில் நடைபெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இருநாட்டு மக்களும் அச்சமடைந்திருந்த நிலையில், சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்ற செய்தியால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 6க்கு மேல் உள்ள நிலநடுக்கங்கள் ஆபத்தானவை. இந்நிலையில் ஒரே நாளில் பசிபிக் பெருங்கடலிலும், இந்திய பெருங்கடலிலும் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களும் ரிக்டர் அளவில் 6 க்கு மேல் பதிவாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இந்திய பெருங்கடலுக்குள் நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது.
அதேபோல இந்தோனேஷியாவின் வடகிழக்கு பகுதியில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆகவும் பதிவானது.
இந்தநிலையில், சுனாமி அபாயம் இருக்க வாய்ப்புண்டு என மக்கள் அச்சமடைந்திருந்த வேளையில், எந்த அசம்பாவிதமும் நடைபெற வாய்ப்பில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் தினம் பிலிப்பைன்ஸில் 5.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post