வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. தேசிய அனல் மின் கழகமும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு முயற்சியாக 3 அலகுகளில் தலா 500 மெகா வாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அனல் மின் நிலைய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.