பூமியை கண்காணிக்கும் ஜிஐசாட் 1 என்ற செயற்கைகோள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பூமி கண்காணிப்புக்காக ஜிஐசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப் 10 என்ற ராக்கெட் மூலம் நாளை மாலை விண்ணில் ஏவப்படவிருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இறுதிக்கட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜிஐசாட் 1 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Discussion about this post