சென்னை உட்பட 6 மக்களவை தொகுதிகளுக்காக தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுப்படும் அரசு பணியாளர்கள் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மக்களவை தொகுதிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ராயபுரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றக்கூடிய காவலர்கள் நந்தனம் கலைக் கல்லூரியிலும் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post