சென்னையில் இன்று 5 ஆயிரத்து 800 காவலர்கள் வாக்களிக்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் தபால் வாக்குப்பதிவை பார்வையிட்ட பிறகு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் அன்று பணியில் இருக்கும் 10 ஆயிரம் காவலர்களில் 5 ஆயிரம் பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சியவர்களுக்கு இன்று தபால் வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
எந்த ஒரு சட்டஒழுங்கு பிரச்னையும் இல்லாமல் வக்களிப்போரின் ரகசியம் காக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், சென்னையில் மொத்தமாக 5 ஆயிரத்து 800 காவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post