எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தபால் நிலையங்களில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்…
தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1 கோடி தபால் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை தபால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பெறும் நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக் கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அங்கு பணம் எடுக்கலாம். இந்த புதிய வசதி கடந்த 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை டெல்லியில் நடைபெற்ற தபால் வங்கியின் ஓராண்டு நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் அறிவித்தார்.
Discussion about this post