வருகிற 12, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக சேலம், தருமபுரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 42 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post