வாடிகனில் மின்சாரம் தடைபட்டதால் லிப்ட்டுக்குள் சிக்கித் தவித்த போப் பிரான்சிஸைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போப் பிரான்சிஸ் பங்கேற்கும் வாராந்திர சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். அந்த வகையில் நேற்று முன்தினம் போப் பிரான்சிஸ் வழக்கத்தை விட தாமதமாக வந்து, கூட்டத்தினர் மத்தியில் பேச தொடங்கினார். முதலில், தாமதமாக வந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தஅவர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தான் லிப்டில் சிக்கிக்கொண்டதாகக் கூறினார். கிட்டத்தட்ட 25 நிமிடம் லிப்டுக்குள்ளேயே இருந்ததாகவும் அதன் பின் தீயணைப்பு வீரர்கள் வந்து தன்னை மீட்டதாகவும் போப் தெரிவித்தார்.
Discussion about this post