காரைக்குடியில், தனியார் மகளிர் கல்லூரி சார்பில் மழை வேண்டி சிவன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை பொய்த்தால் தண்ணீர் பற்றாக்குறை நிழவி வருகிறது. தமிழக அரசு தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து, தனியார் மகளிர் கல்லூரி சார்பில் மழை வேண்டியும், உலக சமாதானத்திற்காகவும் சிவன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், அப்பகுதி பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post