அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை போல், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்க 2 ஆயிரத்து 363 கோடியே 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி உயர கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தினை இன்று துவக்கி வைக்கிறார்.
Discussion about this post