பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், அடுப்புகள் தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போது புதுப் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படையிலிடுவது வழக்கம். சென்னை போன்ற பெருநகரங்களில், குக்கரில் பொங்கல் வைப்பது வழக்கமாகி விட்டது. ஆனால் பழமை மாறாமல், தஞ்சை கீழவாசல் பகுதியில் பொங்கலுக்காக மண்பானைகள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பு வைக்கப்படுகின்றன. மணல் விலை மற்றும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பொங்கல் பானைகளுக்கு உரிய விலை கிடைக்காத சூழல் இருப்பதாக பானை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post