பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்து 500 ரூபாயுடன், பொங்கல் சிறப்பு தொகுப்பு இன்று முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின்படி, பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், துணிப்பையுடன், ரொக்கமாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி, இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கபட உள்ளது. ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் தெருவாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையும் தயார் செய்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. ((அதன்படி 4ம் தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்களுக்காக மட்டுமே முதல் நாள் அன்று வழங்கப்படும். ))மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், நியாய விலைக்கடைகளில் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
Discussion about this post