கும்பகோணத்தில், கந்துவட்டி கொடுமையால் பாலிடெக்னிக் மாணவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் பானாதுறை பத்து கட்டு தெருவில் வசிப்பவர் சிவசுப்பிரமணியன். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் மற்றும் அவரது சகோதரர் பாலகுரு ஆகியோரிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இருந்தார். இதற்காக வட்டியுடன் அவர் பணத்தை செலுத்தி உள்ளார். இருப்பினும் கந்துவட்டியினர், அசல் பணமான 3 லட்சத்தை தருமாறு கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும் சிவசுப்பிரமணியனின் பெண் குழந்தைகளிடம் தரம் தாழ்ந்து பேசியுள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் சிவசுப்பிரமணியன் விஷம் குடித்துள்ளார்.
இந்தநிலையில், மீண்டும் வந்து தகராறு செய்த கந்து வட்டிக்காரர்களிடம் சிவசுப்பிரமணியனின் மகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post