எதிர்கட்சிகள் குறுக்கு வழியில் வாக்கு சேகரிக்க முயற்சிப்பதாகவும், கருத்து கணிப்புகள் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்படுவதாகவும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம் சாட்டினார்.
நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சரவணன், வேதாரண்யம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மூலக்ரை, கரியாப்பட்டிணம், நாகக்குடையான், செம்பேடை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருடன், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்து கணிப்புகள் முற்றிலும் போலியானவை என்றும் ஒருதலைப்பட்சமாக கருத்து கணிப்புகள் வெளியிடப்படுவதாகவும் அவர் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் கையெழுத்து போட்டதுதான் மீத்தேன் திட்டம் என்றும் அதனை ரத்து செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அமைச்சர் கூறினார்.
Discussion about this post