தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 98 லட்சம் கோடி பெண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 472 பேர் மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பதாக பலர் தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக வாக்காளர் சேர்க்கை முகாம் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் நாளை மற்றும் நாளைமறுநாள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களை அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post