பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி, அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தன்னை மிரட்டி மானபங்கம் செய்ததாக பெண் ஒருவர் கூறிய புகாரை அடுத்து, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்தனர். சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நிஷா கார்த்திகேயன் தலைமையில் 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் தடயவியல் நிபுணர் குழுவின் அறிக்கையும் பெறப்பட்டது.

சிபிசிஐடி விசாரித்து வந்த பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம், சிபிசிஐடி ஒப்படைத்தது.

Exit mobile version