பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, குமரி அருகே கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பெண்களை ஃபேஸ்புக் மூலம் காதலித்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள, மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கலை அறிவியல் கல்லூரியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு, உச்சபட்ச தண்டனை தரவேண்டுமெனக்கோரி 3500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
Discussion about this post