பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில், நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து, தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் நக்கீரன் கோபால் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நக்கீரன் கோபால், தேனி கண்ணன் ஆகிய இருவரும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.