நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகளை தயாரிக்கும் பணிகள் தீவிரமாகி உள்ளன.
பின்னலாடை நகரமான திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் முதலில் இருந்தே கட்சி கொடிகள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட டி- சர்ட்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கட்சி கொடிகள் மட்டுமல்லாது தொப்பிகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது கேரளா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி கொடிகள் தயாரிப்பும் நடைபெற்று வருகின்றன. கொடிகள் தயாரிப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post