தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி,கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பிற்பகலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி “மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற ஜாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார். கூறப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது.” என்று கூறப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சி. வளர்மதி இதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். பிறகு சட்ட முன் வடிவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சந்தீப் என்பவரால் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், “10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடையில்ல்லை” என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. சமூக அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ற்கனவே இதேவிவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவோடு இணைத்தும் தீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளார்.