எங்கள் குடும்பத்தின் முதல் மருத்துவர்; 7.5% இடஒதுக்கீடே காரணம் – நெகிழ்ந்த தந்தை

7.5% இடஒதுக்கீடு காரணமாக தங்கள் குடும்பத்தில் முதல் மருத்துவர் உருவாகி இருப்பதாக திருச்சியை சேர்ந்த மாணவரின் தந்தை செந்தில்குமார் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த மளிகை கடை ஊழியரின் மகனான ஹரிகிருஷ்ணனுக்கு, சென்னையில் இன்று நடந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் ஸ்டான்லி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்த ஹரிகிருஷ்ணன், அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்து 423 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் தரவரிசையில் 38வது இடம் பிடித்தார். தனக்கு முன்னணி கல்லூரியில் இடம் கிடைத்ததற்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடே காரணம் என்று மாணவர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தங்கள் குடும்பத்திலேயே முதல் மருத்துவர் ஹரிகிருஷ்ணன் தான் என்றும், தமிழக அரசின் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடே இதை சாத்தியமாக்கியது என்றும் அவரது தந்தை செந்தில்குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Exit mobile version