போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட அரசியல் பிரமுகர்

மதுரை அருகே காவலர் சீருடையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையை அடுத்த நிலையூர் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவரான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சார்பு ஆய்வாளர் போல உடையணிந்து டிக்டாக் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். இதையடுத்து டிக்டாக் செயலி மூலம் ஜாதி உணர்வை தூண்டியதாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Exit mobile version