காரைக்குடியில் லட்சக்கணக்கான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கள்ள நோட்டுகளை சிலர் புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவரஞ்சனி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 94 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இவருக்கு உதவியாக இருந்த கிட்டு என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில் குழந்தைகள் விளையாட்டுக்கு பயன்படுத்த கூடிய 22 லட்சம் ரூபாய் வரையிலான கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து சிவரஞ்சனி, கிட்டு, சின்னையா, சேதுபதி ஆகியோரை கைது செய்த போலீசார், நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post