சென்னை கோட்டூர்புரம் துரைசாமி நகர் பகுதியில் ஆந்திராவில் இருந்து வங்கி வந்த மதுபான பாட்டில்களை கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி காவல்மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் தலைமைக்காவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் சென்று போலீசாரே மதுவாங்க வந்தவர் போல பணம் கொடுத்து இரண்டு 180 ml பாட்டில்கள் வாங்க முற்பட்டபோது மதுவலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன் வயது 50 என்பவரை பொதுமக்கள் தாக்கி விடுகின்றனர்…
இது தொடர்பாக அவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 147, , 294(b), 506(i) IPC r/w 4(1)(a) TNP Act
ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஏழு பேரை கைதுசெய்து, சுமார் 30 பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் இதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள காவலரை தாக்கியதும் தெரியவந்தது…
இது தொடர்பாக சுரேஷ் வயது 42, மணிகண்டன் என்ற குல்லா வயது 28, ஜான் வயது 33, சரவணன் வயது 29, சிவா வயது 34, தாமு வயது 24, அனிதா வயது 28 உள்ளிட்ட 7 பேரை கைதுசெய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு. தலைமறைவாக உள்ள ரமேஷ் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்…