டிக் டாக்கில், குறிப்பிட்ட சமுதாய பெண்களை அவதூறாக பேசியதாக வந்த புகாரை அடுத்து டிக் டாக் புகழ் முத்துவை காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த மரக்கடை உரிமையாளரான ஜி.பி.முத்து ஒரு டிக்டாக் வெறியர். மேலும் இவருடைய வீடியோவிற்கு கமெண்ட் செய்பவர்களை விமர்சித்து இவர் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகளுடன் முத்து வெளியிட்ட வீடியோவில், குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை அவதூறாக பேசியதாக, மதுரையை சேர்ந்த நபர், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். அதனடிப்படையில், ஜி பி முத்துவை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்று தங்களது பாணியில் போலீசார் விசாரணை நடத்தினர். பிறகு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Discussion about this post