கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோயிலில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு சோதனை செய்தனர்.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பையடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய கோயில்களில் மெட்டல் டிடெக்டர் உதவியோடு பக்தர்களையும், பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளையும் சோதனைக்குப் பிறகே கோவிலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக காவல் பாதுகாப்பு படையின் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோயில் பாதுகாப்பு குறித்து கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Discussion about this post