விஷவாயு தாக்கி உயிரிழப்பதில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளதென்றும், பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் வெங்கடேசன், இரண்டு குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்ரகளிடம் பேசிய அவர், கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
விஷவாயு தாக்கி உயிரிழப்பதில் தமிழ்நாடு தான் முதல் இடம்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: poison gaspoison gas attacktn first place
Related Content
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 6 பேர் பலி
By
Web Team
March 26, 2019