உல்லாச உலகம் பகுதியில் இன்று உலக அளவில், சில சுவாரஸ்யமான இடங்களை சுற்றிப்பார்க்கலாம்..
Spotted Lake என அழைக்கப்படும் இந்த வித்தியாசமான தோற்றமுள்ள ஏரி கனடாவில் இருக்கிறது… நீரில் உப்பு, திராவகம், சோடா உள்ளிட்டவை கலந்துள்ளதால் இவ்வாறு காட்சியளிக்கிறது.
அதோடு மக்னீசியம் சல்பேட், கால்சியம், சோடியம் சல்பேட், வெள்ளி, டைடானியம் உள்ளிட்டவையும் கலந்துள்ளன. .. வெயில் காலத்தில் நீர் ஆவியாகும் போது, இந்த வேதிப்பொருட்கள் அப்படியே மேற்பகுதியில் படிவதால், இவ்வாறு வண்ண வண்ண தோற்றங்கள் ஏற்படுகின்றன…
உலகப்போர்களின் போது இங்குள்ள தனிமங்களை பயன்படுத்தி வெடி பொருள் தயாரிக்கப்பட்டது .. தற்போது முக்கிய சுற்றுலா தளமாகவும், மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருள் கிடைக்கும் இடமாகவும் பயன்படுகிறது..
இப்பகுதியின் பெயர் Deadvlei .. இதற்கு இறந்த கழிமுகம் என அர்த்தம்.. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நமிபியா நாட்டில் இது இருக்கிறது.. வெயிலில் வறண்ட பூமியாக மாறிவிட்டதால், களி மண் காய்ந்து இவ்வாறு மாறியுள்ளது.. அதாவது 700 முதல் 900 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக வளமான பூமியாக இருந்த இப்பகுதி, பின்னர் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக இவ்வாறு மாறியுள்ளது…
அப்போது பட்டுப்போன மரங்கள் அப்படியே இன்றும் எலும்புக்கூடுகள் போல நீடித்துநின்று காட்சியளிக்கின்றன.. சுற்றிலும் மிக உயர்ந்த மணற்குன்றுகள் உள்ளன. இந்த வித்தியாசமான பகுதியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் நமிபியா பயணிக்கின்றனர்..
அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த அழகான ஆச்சர்யமான அருவி உள்ளது.. அருவியின் கீழே உள்ள குகைக்குள் இருந்து வெளியேறும் இயற்கை எரிவாயு, தான் இந்த அருவிக்கு முக்கியத்துவத்தை அளிக்கிறது..
குகைக்குள் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும் இயற்கை விளக்கு , சிலுசிலுவென கொட்டும் நீர் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன..
உக்ரைனில் இருக்கும் இந்த ரயில் தண்டவாளம் , காதல் சுரங்கம் என அழைக்கப்படுகிறது.. கிட்டத்தட்ட 5 கி.மீ. தூரம் இந்த தண்டவாளம் நீள்கிறது.. இருபுறமும் மரங்களும், பசுமையாக செடிகளும் நிறைந்து பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன… காதலர்கள் இவ்வழியே நடந்துசென்று மகிழ ஏற்ற இடமாக இது இருக்கிறது..
Discussion about this post