தமிழகம் முழுவதும் போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான மார்கழியின் கடைசி நாளை, தமிழர்கள் போகிப் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பழையன கழிந்தும், புதியன புகவேண்டும் என தமிழர்கள் கருதுகின்றனர். அதையொட்டி, மார்கழியின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை மொத்தமாக அழித்து, சுத்தப்படுத்தி, புதிய பொருட்களுக்கு தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களில் இடமளிப்பர். மேலும் தங்கள் இல்லங்களில் போகியன்று வேம்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ உள்ளிட்ட 5 வகை மூலிகை பொருட்களை கட்டி, தங்கள் வீடுகளில் ஆரோக்கியத்தை தமிழர்கள் பேணுகின்றனர்.
இதனிடையே போகிப் பண்டிகையையொட்டி பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிக்காமல் இருக்க வேண்டுமென மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post