போடியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வரும் கண்மாய்களை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் ஆய்வு செய்தார்
தேனி மாவட்டம் போடியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 30 கண்மாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள பகுதிகளில் கண்மாய்களில் ஆயக்கட்டு மூலம் 10 சதவிகித ஒத்துழைப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள அம்மாகுளம், புதுக்குளம், சங்கரப்பன் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பணிகளை விரைந்து முடிக்க அவர் உத்தரவிட்டார்.
Discussion about this post