இடஒதுக்கீடு போராட்டம் மற்றும் பாமக தலைவர் ராமதாசை கொச்சைப்படுத்தி பேசிய திமுக ஆதரவு பேராயர் எஸ்றா சற்குணம் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எஸ்றா சற்குணம், 1987ல் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், பாமக நிறுவனர் ராமதாசையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எஸ்றா சற்குணம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும், 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரியும் பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை 20ம் தேதி நடைபெறவுள்ளது.
Discussion about this post