ரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் கிர்கிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்க் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று கொண்டுள்ள பிரதமர் மோடி, மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்கிறார். விளாடிவோஸ்டோக் நகரில் அடுத்த மாதம் 4 முதல் 6 தேதி வரை கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவு, பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியிலான ஒப்பந்தங்கள் கையழுத்தாக உள்ளன.
Discussion about this post