மாமல்லபுரத்திற்கு வந்த சீன அதிபருக்கு தமிழரின் பாரம்பரிய உடையில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வரவேற்றார்.மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் மோடியை சந்தித்த சீன அதிபர் ஷி ஜின்பிங் கைகுலுக்கி வரவேற்றார். தற்போது மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபருக்கு விளக்கம் அளிக்கிறார். 63 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த வரலாற்று நிகழ்வு இந்தியா மற்றும் சீனா இடையே நல்ல நட்புறவை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Discussion about this post