பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பொது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
பிரதமரின் ரஷ்ய பயணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஜய் கோகலே, கிழக்கு பொருளாதார மன்றத்தில் சிறப்பு விருந்தினராக கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இந்தியா – ரஷ்யா இருபதாம் ஆண்டு உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்க இருப்பதாக கூறிய விஜய் கோகலே, அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்திருக்கும் பிரதமர், செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா திரும்புகிறார் என்று தெரிவித்தார்.
பிரதமரின் இந்த பயணத்தின் போது, கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணுமின் உலைகள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து 6 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும், 6 புதிய அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையிலும் மோடி ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Discussion about this post