இரண்டு நாள் அரசு முறையாக பயணமாக ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
கிழக்கு பொருளாதார மன்றத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ளும் மோடி, இந்தியா – ரஷ்யா இருபதாம் ஆண்டு உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். பிரதமரின் இந்த பயணத்தின் போது, கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணுமின் உலைகள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து 6 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும், 6 புதிய அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையிலும் மோடி ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பின் போது இந்தியா – ரஷ்யா இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post