டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுவதால், மைதானத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அதற்காக ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, ராம்லீலா மைதானத்தை ஒட்டிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தைச் சுற்றி 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு படை கமாண்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post