மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பேளூர் மடம் சென்று சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரை வணங்கி வழிபட்டார்.
பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு நேற்று மாலை சென்றார். கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், ஹவுராவில் உள்ள பேளூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமை அலுவலகத்துக்கு, பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவச்சிலையை வணங்கி வழிபட்ட பிரதமர் மோடி, மடத்தில் நடைபெற்ற பஜனையிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர், சாதுக்களுடனும் கலந்துரையாடினார்.
Discussion about this post