ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கிய அரசியல் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவை தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பிறகு சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை செயல்படுத்த மத்திய பாஜக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதுகுறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.
இந்தநிலையில் கூட்டத்திற்கு பிறகு டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்தது சிறப்பாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் தேசத்தின் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனைகள் வழங்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தலின் செயலாக்கம் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post