டெல்லியில் மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
மறைந்த பிரதமர் வாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு அவரது பெயரை மத்திய அரசு சூட்டி உள்ளது. வாஜ்பாய்க்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது.
அதனடிப்படையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாயணத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டும் உருவத்துக்கு கீழ் அவரது பெயர் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிங்கமுகம் கொண்ட அந்த சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.